அதிமுகவிலிருந்து சிவி சண்முகம் கட்சி மாறமாட்டார் அதிமுகவில் தான் இருப்பார் தவெகவிற்கு செல்ல மாட்டார் தவெக செல்லும் நிலைபாட்டில் சிவி சண்முகம் இல்லை அதிமுகவில் தலைமை மாற வேண்டுமென சிவி சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக சிவி சண்முகம் ஆதரவாளரும் முன்னாள் கோலியனூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த சுரேஷ்பாபு தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில தினங்களுக்கு முன் அதிமுக தோல்விக்கான காரணம் குறித்த கூட்டம் கூட்டியபோது அதற்கான காரணம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜீனன், விழுப்புரத்தில் போட்டியிட்ட சுரேஷ் பாபு விஜயா, வானூரில் போட்டியிட்ட முருகன் ஆகியோரை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை எப்படி தோல்விக்கான காரணம் தெரியும் என குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளராக உள்ள பசுபதி திமுக,பாமக போன்ற பல்வேறு கட்சிகளில் இருந்து தோல்வியடைந்த பின்னர் விலகி தன்னிடம் கேட்டு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இனைவதற்கே தன்னிடம் 5 லட்சம் பணம் கேட்டதாக குற்றஞ்சாட்டினார். வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாத நபர் புதிய மாவட்ட செயலாளர் பசுபதியால் தான் விழுப்புரத்தின் நகர பகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக தோல்வியை தழுவியதாக கூறினார்.பொதுச்செயலாளராக தகுதியே இல்லாத நபர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர் எப்படி தகுதியான மாவட்ட செயலாளரை நியமிப்பார். நாங்கள் கட்சியை விட்டு விலகி தான் நிற்கிறோம் கட்சியை விட்டு செல்லவில்லை அதிமுக வேட்டியை தான் அணிவோம் என கூறினார்.
அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் வரவேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுனையாக இருந்தோம் ஆனால் தற்போது பஸ் தலைமை சரியில்லை தலைமையை மாற்ற வேண்டும் எந்த தலைமையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் பல தோல்விகளை கண்ட எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க மாட்டோம் என்றும் அதிமுகவிலிருந்து சிவி சண்முகம் கட்சி மாறமாட்டார் அதிமுகவில் தான் இருப்பார் தவெகவிற்கு செல்ல மாட்டார் தவெக செல்லும் நிலைபாட்டில் சிவி சண்முகம் இல்லை என தெரிவித்துள்ளார்.
பேட்டி – சுரேஷ்பாபு (முன்னாள் கோலியனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் )












