காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டுகள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தனபால் கோரிக்கை.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டப்பத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிறுவன தலைவர் தனபால் கூறுகையில்:
அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கு ‘காமராஜர்’ பெயர் சூட்டப்படும் என்றும், அத்திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் என்றும் அறிவித்த தமிழக முதல்வருக்கு அக்கட்சி சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது; மேலும், தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிசெய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் போல அரசியலிலும் மாற்றமும் முன்னேற்றமும் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதுடன், மதுவின் கெடுபிடிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், பனை/தென்னை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆந்திர மாநிலத்தைப் போல தமிழகத்திலும் கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பேட்டி – தனபால் (பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் )













