திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் 10ஆம் ஆண்டு விழா -புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. தாசப்த கனவு என்ற கருப்பொருளில் நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் இதில் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குநராக இருக்கும் டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார். தரம் கல்வி குழும நிர்வாகிகளான பள்ளியின் தாளாளர் பப்ளசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியின் முதல்வர் சாந்தி பாலச்சந்தர் மற்றும் தரம் கல்வி குழுமத்தின் மற்றொரு கிளையான ஆக்ருத்திப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமாலதா ஆகியோர் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பத்தாம் ஆண்டு நிறைவு விழா என்பதால் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சிவதாண்டவம், தசாவதாரம், தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் கலைகளான பரதநாட்டியம், மயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம்,நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தமைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பள்ளி நிர்வாக இயக்குநர் அனுராக் நன்றி கூறினார்.













