மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணியில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விளக்கம்:-
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நடைபெற்றது.
ரயில்வே காவல் துறையினர், ரயில்வே சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நடைமேடையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். தொடர்ந்து, ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்களிலும் நடைமேடையிலும் இருந்த பயணிகளை சந்தித்து தூய்மை பாரதம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்வில்
மக்கும் கழிவுகள் மற்றும் ஈரக்கழிவுகளான உணவுப் பொருட்கள், பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை போடுவதற்கு.
நீல நிறத் தொட்டியிலும், மக்காத உலர்ந்த கழிவுகளான காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை
சிவப்பு நிறத் தொட்டியிலும், நாப்கின், முகக்கவசம் பஞ்சு மற்றும் குழந்தைகளின் டயப்பர்கள் போன்ற சுகாதாரக் கழிவுகளை
கருப்பு நிறத் தொட்டியிலும், நச்சுத்தன்மை வாய்ந்த வேதியியல் மற்றும் மின்னணுக் கழிவுகளை போடுவதற்கு.
ரயில் பயணத்தின் போது கழிவுகளை கண்ட இடங்களில் வீசாமல், உரிய குப்பைத் தொட்டிகளில் முறையாக பிரித்துப் போட்டு, ரயில் நிலையங்களையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.














