காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பின் சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட காசநோய் பிரிவு (பொறுப்பு) மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரபிரியா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமு, சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி, அலுவலக உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் எல். அரவிந்த் நாராயணன் தலைமை ஏற்று, சுண்டல், மொச்சை, வரகு, பச்சை பட்டாணி உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய நல உதவிப் பெட்டகங்களை காசநோயாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் மற்றும் ஆய்வக நுட்பநர் லோகநாயகி ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், சித்தா பிரிவைச் சேர்ந்த நாகலட்சுமி, காசநோய் பிரிவைச் சேர்ந்த ஸ்வேதா, மரிய மெரினா, ஜாக்குலின் மற்றும் இராஜி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு, தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்கினர்.







