மயிலாடுதுறையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் அரசு திட்டத்தில், எந்தவித அரசு பொறுப்பிலும் இல்லாத தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் கோபிநாத், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
:-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதியாக தாய் மாமன் தங்க மோதிரம் வழக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை மதுரையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் துவக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நேரடி ஒளிபரப்பாக மதுரையில் முதலமைச்சர் துவக்கி வைத்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது அப்பொழுது, நிகழ்ச்சியின் முன் வரிசையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி ஆகியோருடன் , தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் அமர்ந்திருந்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் பொழுது, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் மோதிரங்களை குழந்தைகளுக்கு அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்தார். எந்தவித அரசு பதவியிலும் இல்லாத ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியர் உடன் இணைந்து மோதிரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
















