கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கடந்த மாதம் சிற்றாலயத்தில் வழிபாடு மேற்கொண்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டதை கண்டித்தும் கிறிஸ்தவ முன்னணி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனையான ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 100 ஆண்டு கால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலைய வழிபாட்டு தளம் இருந்ததாக கூறப்படுகிறது இதில் கிறிஸ்தவ வழிபாட்டு தளத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் குறிப்பாக 41 நாட்கள் தவக்காலம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை அதில் சிறப்பாக கொண்டாடப்பட்டு அனைத்து மத ஊழியர்களுக்கும் கலந்து கண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய காலகட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் பூரண சுகம் பெறவும் மன அமைதி பெறவேண்டியும் இந்த சிற்றாலயத்தில் வழிபாடு மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் நாளடைவில் அந்தப் பகுதியை பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலகமாக மாற்றப்பட்டது. நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி கிறிஸ்தவ அமைப்பினர் பல்வேறு கோரிக்கை மனுகளை அளித்து வந்தனர். மேலும் இதற்காக கண்டன ஆர்ப்பாட்டமும் பலமுறை நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த மாதம் சிற்றாலயம் முன்பு கிறிஸ்தவர்கள் கூடி வழிபாடு மேற்கொண்டதால் அனுமதி இன்றி வழிபாடு மேற்கொண்டதாக கூறி காவல் தறையினர் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. இதனைக் கண்டித்து கிறிஸ்தவ முன்னணி இயக்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் சிற்றாலயம் முன்பு வழிபாடும் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
















