காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து டெல்லி பேரணிக்கு செல்ல சிறப்பு ரயில் அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ஒன்றிய அரசே கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் காவிரியில் தண்ணீர் வழக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் காவிரியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் பேரணி செல்வதற்கு தனி சிறப்பு ரயில் அனுமதிக்கப்பட்டு அதற்கான முன் தொகையும் ரயில்வே நிர்வாகம் பெற்று ஒப்புதல் அளித்த நிலையில் திடீரென ஒன்றிய அரசு சிறப்பு ரயில் அனுமதியை மறுத்துள்ளது இதனை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக சிறப்பு ரயில் அனுமதியை வழங்க வேண்டும் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு வலியுறுத்த வேண்டும் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சி உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.













