சீர்காழி அருகே திருவெண்காடு- மங்கைமடம் இடையே சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் புகை மூட்டமாக காணப்படும் சாலை வாகன ஓட்டிகள் ஆவதி:-
மூச்சு திணறால் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு – மங்கைமடம் இடையே அமைந்துள்ள மணிகரனையாற்றின் கரையோரமும் பிரதான சாலையோரமும் இருந்த கிராம குளத்தை குப்பைதொட்டியாக்கி இரண்டு ஊராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனிநபர்கள் மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொட்டி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் காற்றின் காரணமாகவும் விவசாயிகள் நிலத்தில் குப்பைகள் அடித்து செல்வதால் விவசாயம் பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கபடுவதும் வாடிக்கையாக உள்ளது.இன்று தீ எரிவதால்சாலை புகை மூட்டமாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவெண்காடு மங்கைமடம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருவதுடன் தீவைத்து எரித்து காற்றையும் மாசுபடுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்த குப்பைகளையும் இறைச்சி கழிவு மற்றும் கடும் துர்நாற்றத்தையும் கடந்தே உலக பிரசித்தி பெற்ற திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி குளத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தற்போது குப்பைகளை கொளுத்தி விடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் ஒரே புகை மூட்டமாக உள்ளதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.இதில் ஒரு பெண்மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளானார், குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:ரவி (சமூக ஆர்வலர்)













