ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் ஒன்றிய நகர கிளை சார்பில் ஈக்காடு வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளரும ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தொடக்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.அப்போது தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் உயர்கல்வியில் 7.5 சதவீதம் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் வழங்கும் ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதேபோல் ஆசிரியர் தேர்வில் டெட் என்ற தகுதி தேர்வு தற்போது ஆசிரியர்களின் பணி தொடர, தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்ற சட்ட நிலைக்கு உட்பட்டு இருப்பதால் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் அறிமுகப்படுத்தி 2010 இல் நடைமுறைக்கு கொண்டுவந்த நிலையில், 2011 இல் தான் டெட் தேர்வு முதல் முதலில் அரசு நடத்தியது. அதனால், 2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார செயலாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் பாலு மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மு.மகாலட்சுமி, மாநில செயலாளர் ஸ்டீபன் சற்குணர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர் , நிர்வாகிகள் ஜெயக்குமாரி, ஜானகி, திலகவதி, கலையரசி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில அளவில் நிர்வாக குழு கூட்டம் கூடி அழுதுட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் இரா தாஸ் தெரிவித்தார்.
பேட்டி : இரா.தாஸ்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர்













