தரங்கம்பாடி அருகே ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம் செய்தார் :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது . ராமாயணத்துடன் நேரடி தொடர்புடைய இக்கோயிலில் தனிசன்னதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார்.பல்வேறு சிறப்புகளை உடைய இக்க்கோயிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு கோயில் உள்ளே சென்று ராமர், சீதை, லெட்சுமணன் சன்னதி மற்றும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி வழிபாடு செய்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி வலம் வந்து தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் 17 நெய் அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார் இதே போல் சோழ நாட்டு திருச்செந்தூர் என அழைக்கப்படும் திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார் .













