சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று அப்பகுதியில் வங்கியில் எலக்ட்ரிஷியன் பணி செய்து வரும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பவரை கடித்தது. அதன் பின்னர் அந்த நாய் புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நவநீதனையும் (53) அதே பகுதியில் சென்று கொண்டிருந்த ஜக்ரியா (73),மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஸ்ரீராம் ஆகியோரையும் கடித்துவிட்டு ஓடியது இதனை கண்ட பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள், மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறி நாயை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்













