நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தூத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா வயது 36. இவர் ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சன்னாநல்லூர் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் தூத்துக்குடி கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது குடவாசல் அருகே சிமிழி கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு வயது 25 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது தூத்துக்குடி கடைவீதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தார்.
இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விஷ்ணு கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் மலேசியா நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாகவும் மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மயிலாடுதுறையில் நாளை நடக்க உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













