• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..!!!

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மது கடைகளில் மது பாட்டில்களின் விலை அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்கிறது. பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா என அனைத்து வகையான மதுபானங்களின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் வரை ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது ஏற்கனவே எம்ஆர்பிக்கு மேலாக பாட்டில் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் எம்ஆர்பி விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. பாட்டிலை பயன்படுத்திய பிறகு திரும்ப ஒப்படைத்தால் அதற்கான பத்து ரூபாய் திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் விற்பனையில் BLACK PEARL BRANDY, OLD SECRET XXX RUM, HONIEY DAY BRANDY, OLD MONK DELUX RUM, TOP STAR SPECIAL BRANDY உள்ளிட்ட சாதாரண ரக மதுபான பிராண்டுகளே சுமார் 40 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

இந்த ரகத்தில் 180 மில்லி அளவுள்ள குவாட்டர் பாட்டிலின் பழைய விலை ரூ.140 ஆக இருந்தது. தற்போது ரூ.10 சேர்க்கப்பட்டு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 375 மில்லி அளவுள்ள ஹாப் பாட்டிலின் விலை ரூ.280-ல் இருந்து ரூ.290 ஆகவும், 750 மில்லி அளவுள்ள ஃபுல் பாட்டிலின் விலை ரூ.560-ல் இருந்து ரூ.570 ஆகவும் உயர்ந்துள்ளது.

MAGNUS CHOICE VSOP BRANDY, POWER VODKA, TRIPLE CROWN VSOP BRANDY, SNJ NO.1 SUPER STRONG உள்ளிட்டவை மீடியம் ரக மதுபானங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 180 மில்லி குவாட்டர் பாட்டிலின் பழைய விலை ரூ.170. தற்போது இது ரூ.180 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், 750 மில்லி ஃபுல் பாட்டிலின் விலை ரூ.680-ல் இருந்து ரூ.690 ஆக உயர்ந்துள்ளது.

பிரீமியம் ரக மதுபானங்களான EL CANSO DARK RUM, OLD MONK PREMIUM XXX RUM, BRITISH EMPIRE, BACARDI CLASSIC SUPERIOR RUM, MORPHEUS BLUE XO BRANDY உள்ளிட்ட பிரீமியம் ரக மதுபானங்களின் விலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரகத்தில் 180 மில்லி குவாட்டர் பாட்டிலின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.210 ஆகவும், 750 மில்லி ஃபுல் பாட்டிலின் விலை ரூ.800-ல் இருந்து ரூ.810 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், சில உயர்ரக மதுபானங்களின் புதிய விலைகளும் புதிய விலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, 1000 மில்லி KONIGGEN PREMIUM FRENCH BRANDY விலை ரூ.1,770 ஆகவும், 1000 மில்லி HENRY X SPECIAL RESERVE BRANDY XO விலை ரூ.2,690 ஆகவும், 750 மில்லி MORPHEUS BLUE XO விலை ரூ.1,410 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியலின் படி, மதுபானத்தின் ரகம் அல்லது குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் என பாட்டிலின் அளவு எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 மட்டுமே கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனியாக வசூலிக்கப்பட்டு வந்த பாட்டில் கட்டணத்தை எம்ஆர்பி விலையுடன் இணைத்திருப்பதே இந்த விலையேற்றுட்க்கான காரணம் எனவும், எனவே, நவம்பர் 1 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது புதிய MRP விலையையே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது ரூ.10 திரும்பப் பெறலாம் என டாஸ்மாக் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் கல்லறைத்திருநாளை முன்னட்டு ஆராதனை

Next Post

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6