கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு – அதிகாரிகள் அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் எந்த உள்ளாட்சி பொறுப்புகளிலும் இல்லாத தவெக கட்சி நிர்வாகிகளை வைத்து கூட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் நடத்தியதால் அதிகாரிகள் முகம் சுளிப்பு
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் ஆய்வு கூட்டமானது நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத்கண்ணா,சுதாகர்,சிந்து , மற்றும் கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் குண ஐயப்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் அதிகாரிகள் பலமுறை சொல்லியும் கேட்காத தவெகவினர் மற்றும் மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் யாருமே எந்த உள்ளாட்சி பதவியில் கூட கிடையாது ஆனால் இவர்கள் அதிகாரிகள் அமைச்சர் இடையேயான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றது அதிகாரிகளுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது
இதன் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கற்பகம் சிறப்பு அங்காடியில் ஆய்வு செய்தார் பட்டாசு விற்பனையையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்







