5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் சரிவர நடக்கவில்லை என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்*.
நகரமன்ற கூட்டம்
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், , , வக்கீல் ராதிகா செந்தில், கோல்டுசேகர், , ரியாஸ்அகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
மாசடைந்த ஏரிகள்
விழுப்புரம் நகரில் உள்ள எருமனந்தாங்கல், மருதூர், சாலாமேடு, வழுதரெட்டி, காகுப்பம் உள்ளிட்ட ஏரிகளில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அதுபோல் ஏரிகளில் கழிவுநீரும் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைவதால் நகரின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த ஏரிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குப்பை கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த ஏரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடை கழிவுநீர், பிரதான சாலைகளிலேயே வழிந்தோடுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த வேலையை சொன்னாலும் காதில் வாங்குவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளனர்.
. 42 வார்டுகளிலும் முக்கிய சாலைகளில் கால்நடைகளில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கால்நடைகளை ஏன் பிடிப்பதில்லை? தற்போது மழைக்காலம் என்பதால் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கொசு மருந்தையும் முறையாக தெளிக்க வேண்டும். அதுபோல் நகரில் நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.








