• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜோலார்பேட்டை அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – முன்விரோதம் காரணமா? டிஎஸ்பி நேரில் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூர் அடுத்த அண்ணாண்டப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (70), பால்நாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவர் தனது மனைவி சாரதாவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மீது கற்கள் வீசப்படுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து வீரமணி கதவைத் திறந்து வெளியே செல்ல முயன்றபோது மீண்டும் அதேபோன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சாரதா, வீரமணியை வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வீரமணி, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் நின்றுகொண்டு கற்களை வீசுவது போன்ற சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாலாஜி, வீட்டின் மீது வீசப்பட்டது கல் அல்ல பெட்ரோல் குண்டு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே திருப்பத்தூர் டிஎஸ்பி முரளி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 23.11.2022 அன்று திருப்பத்தூரில் பாஜக நகரச் செயலாளராக பணியாற்றி வந்த கலிகண்ணன் என்பவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஹரிவிக்னேஷ், அருண்குமார், ஆனந்த், நவீன்குமார், மணிகண்டன், அருண், கோகுல், அப்துல் அலி, சமீர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவரான அருண்குமார், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரமணியின் மகன் ஆவார். தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர் நேற்று கலிகண்ணன் கொலை வழக்கு தொடர்பாக திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வந்து சென்றதாக தெரிகிறது.

இந்த சூழலில அருண்குமார் மீதான முன்விரோதம் காரணமாக அவரது வீட்டைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

Next Post

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

விழுப்புரம் ஆதிபராசக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு விழா சிறப்பு வேள்வி பூஜை

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6