• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..
50 சதவீத பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது; மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

திருவாரூர், நவம்பர் -03:

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.261.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 புதிய அரசு கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், சேரன்குளம் மற்றும் ஏத்தங்குடி ஊராட்சிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள், சேரி, கீரங்குடி பகுதிகளில் ஊராட்சி மன்றக் கட்டடங்கள், வில்லியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள், திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம் உள்ளிட்ட 7 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 1,771 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,226.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள், வங்கிக் கடன் மற்றும் கல்விக் கடனுக்கான காசோலைகள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள், கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபார்த்து புனரமைப்பதற்கான ஆணைகள் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பிலான நீர் சேகரிப்பு அமைப்பு, நிரந்தரப் பந்தல், தெளிப்பான், தென்னங்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பயிர் காப்பீடு விரைவில் வழங்கப்படும்!

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:

திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்தபோது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, குளங்கள் மற்றும் குட்டைகளில் ஆகாயத்தாமரை, புல், புதர்கள் வளர்ந்து நீர் தேங்கியிருப்பதைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவாரூர் நகராட்சி இணைந்து 56 குளங்கள், 18 குட்டைகளைத் தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன.

பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரை 50 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதத் தொகையையும் விவசாயிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளுநர் மற்றும் யுஜிசி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியுள்ளது.

மேலும், 9 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே 2,700 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 6 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும். இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பணிகள் முறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொதுமக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்குவது பெருமைக்குரிய விஷயம். எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை. முதலமைச்சர் தனது அரசுப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அரிசி விலை உயர்வு குறித்து நடவடிக்கை!

அரிசி விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உணவுத்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எங்களுடைய பிரச்சினைகளாகும். அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றார்.

திருவாரூரில் செவிலியர் கல்லூரி அமைக்கப்படுமா?

திருவாரூரில் செவிலியர் கல்லூரி அமைப்பது குறித்த கேள்விக்கு, செவிலியர் கல்லூரி தனது துறையின் கீழ் வரவில்லை என்றாலும், அதன் தேவை அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் ஸ்ரீதர், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம தனபதி,
வருவாய் கோட்டாட்சியர்கள் சத்யா யோகேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நம்பிராயர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாத பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி: விஸ்வநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

விழுப்புரம் ஆதிபராசக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு விழா சிறப்பு வேள்வி பூஜை

November 3, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6