செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வமாக வணங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவிலை
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கத் துடிக்கும் வருவாய்த்துறையை கண்டித்து இந்து முன்னணி மற்றும் கிராம பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் பொதுமக்கள் எங்களுடைய குலதெய்வம் கோயிலை இடிக்க கூடாது என்று குடும்ப ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து விடுகிறோம் இன்று போராட்டத்தில் ஏற்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி
வருவாய் துறை அதிகாரிகள் கோவிலை இடிக்க மாட்டார்கள் என்று உறுதி அளித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.








