நடிகர் கமல், நடிகர் சிம்பு இருவரும் கழுத்தை நெறித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுள்ளனராம். தக் லைஃப் படத்தில் இவர்கள் இருவருக்கும் தான் பெரிய சண்டை நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
சிம்பு இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக ஹீரோக்கள் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்கள். பிள்ளையார் சுழி போட்டது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி தான்.
அதேபோல் சூர்யாவும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது சிம்புவும் கமலுக்கு எதிராக நடித்திருக்கிறார். ஆகையால் தக் லைஃப் படம் தரமான சம்பவங்களுடன் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.