மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி
கடற்கரைப் பகுதியில்
சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை -. இரண்டாவது நாளாக நடைபெற்றது :-
கடந்த 2008 ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு கடல் வழியிலான பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் மாநிலக் காவல்துறையினரால் இணைந்து கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
சி- விஜில் கடற்கரையோர மாவட்டங்களில் நடைபெறுகிறது. அதன்படி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில்
தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ‘சீ விஜில்- இரு நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இரண்டாவது நாளாக இன்று கடலோர பாதுகாப்பு போலீஸ் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சந்திரபாடி முதல் சின்னங்குடி வரை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டத்துடன், சந்தேகத்திற்கிடமான வகையில் கடல் வழியை யாராவது வந்தால் கடலோர காவல் படைக்கு தகவல் தர வேண்டும் என்று மீனவர்களிடம் எடுத்துக் கூறினர்.







