மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு; காதலியுடன் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த இளைஞர் கைவரிசை காட்டியது சிசிடிவி யில் அம்பலம்:-
மயிலாடுதுறையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தீபாவளி தினத்தன்று இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் தனியாக கழிப்பறைக்கு சென்ற அந்த இளைஞர் ஆண்கள் கழிப்பறைக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த 4 பித்தளை டேப், பெண்கள் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்த 2 டேப் என சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள 6 பித்தளை உபகரணங்களை திருடிவிட்டு, தண்ணீர் வெளியேறாமல் இருக்க மரக்குச்சிகளை சொருகிவிட்டு சென்றுள்ளார். காதலியுடன் இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்த காட்சி, இளைஞர் மட்டும் தனியாக ஆண்கள் கழிப்பறைக்குள்ளும், பின்னர் பெண்கள் கழிப்பறைக்குள்ளும் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதே ஜோடி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் அண்மையில் பெட்ரோல் பங்க் கழிப்பறையில் பித்தளை உபகரணங்களை திருடி கைவரிசையைக் காட்டி தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







