சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் –
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு; போலீசார் திணறல்!
சென்னை பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில், கைதிக்கு முதலில் யார் ஜாமீன் பெற்றுத் தருவது என்பது தொடர்பாக இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிக்கு ஜாமீன் பெற்றுத் தருவது தொடர்பாகத் தொடங்கிய இந்த வாக்குவாதம், நாளடைவில் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்
அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்த மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகளும் சவாலாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இந்நிலையில்,அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.








