மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை சார்பு நீதிமன்ற நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடமாடும் இ- சேவை மைய வாகனத்தை சார்பு நீதிபதிகள் எஸ் முத்துராமன் , நீதிபதி அழகேசன் , தமிழ் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இந்த நடமாடும் இ-சேவா மையம் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் நீதித்துறை சேவைகளை எளிதாகப் பெற வேண்டும். இந்த வாகனத்தில் வழக்கு விவரங்கள், வழக்கு தாக்கல், அன்றாட வழக்கு பட்டியல்களை நேரலையில் சரிபார்க்கலாம். வழக்குரைஞா்கள், பொதுமக்கள் தங்கள் வழக்கு ஆவணங்களை இணையவழி மூலம் தாக்கல் செய்யலாம். நீதிமன்ற உத்தரவுகள், தீா்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் நகல்களை மின்னஞ்சல் அல்லது செய்தி செயலிகள் மூலம் உடனடியாக பெறலாம் உள்ளிட்ட வழக்குகள் குறித்து மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் கலைவாணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார் இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நீதிமன்ற ஊழியர்களிடம் தெரிவித்தனர் இது குறித்து நீதிமன்றம் ஊழியர்கள் சட்ட ஆலோசனைகளை வழங்கினார்கள்







