நாகை அருகே தோப்புத்துறை எலக்ட்ரிக்கல் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி
நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஆர்எம்ஆர் எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்த கடைக்கு இரண்டு இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். ஒரு இளைஞர் வடமாநில இளைஞர் மற்றொரு இளைஞர் தமகத்தை சேர்ந்தவர். வேதராண்யத்தில் கட்டுமானப்பணிகள் நடைப்பெறுவதாக கூறி எலக்ட்ரிக்கல் பொருட்கள் கேட்டுள்ளனர். மேலும் ஆட்டோக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி 500 ரூபாயக்கு சில்லரை கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியை திறந்து சில்லரை எடுத்து கொடுத்துள்ளார். எலக்ட்ரிக்கல் பைப் மற்றும் பொருட்களை கடைக்குள் சென்று இளைஞருக்கு எடுத்து கொடுத்துள்ளார். அப்போது வெளியில் நின்ற நபர் கல்லாப்பெட்டியில் இருந்த 50000 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். பொருட்களை வெளியே எடுத்து வந்து வைத்துவிட்டு கட்டி வையுங்கள் ஏற்றுவதற்கு வாகனம் எடுத்து வருவதாக கூறி இரண்டு இளைஞர்களும் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனிடையே 1 மணி நேரம் கழித்து கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்த போது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது எலக்ட்ரிக்கல் பொருள் வாங்குவது போல் நடித்து பணத்தை திருடிச் சென்றது அம்பலமானது. இதனையடுத்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொருட்கள் வாங்குவது போல் நடித்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







