ஆளம்பரை கோட்டை குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் ராக்கெட் உதிரிபாகுமா அல்லது வேறு ஏதாவது வெடிபொருளா
மீனவ கிராம மக்கள் அச்சம்.
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு அடுத்த கடப்பாக்கம் மீனவ பகுதியான ஆளம்பரை கோட்டைகுப்பம் மீனவ கிராமத்தில் அதிகாலையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் ஜி 4 சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்,வருவாய் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கரை ஒதுங்கிய மர்ம பொருள் ராக்கெட்டின் உதிரி பாகமா அல்லது வேறு ஏதாவது வெடிக்கும் தன்மை உள்ள பொருளாய் என்று விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகாலையில் கரை ஒதுங்கிய இந்த மர்ம பொருளால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







