ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் வணிகர்கள் கொண்ட கூட்டத்தை தமிழக அரசு கூட்ட முன் வர வேண்டும் என திருவாரூரில் இறுதி பிரச்சார பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் பேட்டி….
மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தவும் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசி மணல் அணைக்கட்டுமாணத்தை துவங்கிடவும் காவேரி டெல்டா உணவு உற்பத்தி மண்டலத்தை பாதுகாக்கவும் செப்டம்பர் 20ஆம் தேதி பூம்புகாரில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தொடங்கினார். அதன் இறுதியாக இந்தப் பிரச்சார பயணத்தை இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பி.ஆர் பாண்டியன் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில்…
தமிழ்நாட்டில் சூப்பர் எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் பேரழிவு பெருமழை பெய்து மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட போவதாக தமிழக பேரிடர் மேலாண்மை துறை மூலம் போடப்பட்ட ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அடுத்த ஆண்டு மிகப்பெரிய தாக்குதல் தீவிரமடையும் வீடுகளிலே குடியிருக்க முடியாது என்கின்ற கருத்துகளை எல்லாம் அந்தப் பேரிடர் மேலாண்மை எலினோ ஆய்வுக் குழு குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இப்பொழுது மேகதாட்டில் ஆணைய உத்தரவை நிறைவேற்ற கர்நாடகா மறுக்கிறது ஆணையம் போட்ட உத்தரவை ஏற்று 6000 கன அடி தண்ணீரை விடுவிக்க மறுக்கிறது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி சாகுபடி செய்ய இயலாது. மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அதை மீறி சாகுபடி செய்தாலும் வடகிழக்கு பருவமழையில் பேரிடர் பேரிழப்பு ஏற்பட போகிற பேராபத்து இருக்கிறது. எனவே ராசிமணலில் அணை கட்டுவதற்கு தேவையும் நெருக்கடியும் ஏற்பட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் அனுமதி பெறாமலேயே விரிவான வரைவு திட்ட அறிக்கை என்று ஒரு போலியான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்திருப்பதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் வணிகர்கள் கொண்ட கூட்டத்தை தமிழக அரசு கூட்ட முன் வர வேண்டும்.
எல்லினோ தாக்குதலால் ஏற்படுகின்ற பேராபத்திலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்று அனைத்துக் கட்சி விவசாய அமைப்பு மற்றும் வணிகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் என கூறினார்.
பேட்டி: பி.ஆர் பாண்டியன்

















