தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் மாலை தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருக்கடையூர், பொறையார், அனந்தமங்கலம், ஆக்கூர், தில்லையாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கன மழை பெய்ய தொடங்கியது ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் மழையின்றி வெப்பமான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது செய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













