ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பனை விதைகளை ஆர்வமுடன் நடவு செய்தனர்..
தமிழகத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தமிழக கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பண விதைகள் நாடும் இயக்கமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி மைதானத்தை சுற்றிலும் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டாட்சியர் தனசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரம் நடுவதன் நன்மைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நன்னிலம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் குமார், பத்மநாபன், தர்மா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.













