திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு!
துபாய் நீர்வீழ்ச்சி முதல் 3டி அனுபவம் வரை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள்
திருவள்ளூரில் பொதுமக்களை கவரும் வகையில், துபாய் நீர்வீழ்ச்சி, தேவதை நிகழ்ச்சி, திகில் வீடு, டிஜே இசை, உணவுத் திருவிழா, பனிப்பொழிவு, செல்ஃபி கார்னர், 3டி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகத்தை அதன் உரிமையாளர் அஸ்வின் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவில் தி.மு.க. கவுன்சிலர் அயூப் அலி, மேலாளர் சிவா, சந்தோஷ், முரசொலி செய்தியாளர் இரா. அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடும்பத்தினருடன் வந்து பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திறப்பு விழாவையொட்டி பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.













