கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 100க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகளை சீல் வைத்துள்ளனர் – ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு – செங்கல் கிடைக்காததால் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகளும் முடங்கியது – இது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுகுறு தொழில் வரிசையில் செங்கல் தொழில் மிக முக்கிய தொழிலாக இருந்து வருகிறது மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன இதில் ஏழை எளிய மக்கள் வேலை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர் இந்த நிலையில் கனிம வளம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென வந்து தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகளை இழுத்து மூடி சீல் வைத்து சென்று விட்டனர் இதனால் செங்கல் சூளையில் பணியாற்றிய ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வேலை இழந்து தவித்து வருகின்றனர் செங்கல் கிடைக்காததால் இதன் சார்பு தொழிலான மாவட்டம் முழுவதும் உள்ள கட்டுமான தொழில்களும் முடங்கியது இதைத்தொடர்ந்து மாவட்ட முழுவதும் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.













