கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பொது நிதி தவறாக பயன்படுத்தி கடந்த 15 வருடங்களாக பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் கணினி ஆப்ரேட்டருக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது தொடர்பாக பேரூராட்சி தலைவி தலைமையில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் பேரூராட்சி தலைவி அனுசியா தலைமையில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பொது நிதி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் கணினி ஆப்பரேட்டராக பெண் பணியாளர் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேரூராட்சி நிதியிலிருந்து மாதம்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு பேரூராட்சியில் இருந்து சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 15 வருடங்களாக சுசீந்திரம் பேரூராட்சியில் இருந்து மட்டுமே அந்த கணினி ஆப்ரேட்டர் பணியாளருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது . இதனால் சுசீந்திரம் பேரூராட்சி வருவாய் குறைந்த பேரூராட்சி என்பதால் நிதி நிலையில் சிரமம் ஏற்படுவதாக கோரி ஆறு மாதங்களுக்கு முன்பே கவுன்சிலர்கள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து இந்த பணியாளருக்கு சுசீந்திரம் பேரூராட்சி நிதியிலிருந்து சம்பளம் கொடுப்பதை எதிர்த்து தீர்மானத்தை பேரூராட்சி துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் சுசீந்திரம் செயல் அலுவலரிடம் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டத்தில் வாக்குவாதம் வலுபரம் பேரூராட்சி தலைவி அனுசியா மற்றும் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில்10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அத்தகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பேட்டி: தாணுமாலய பெருமாள்( 6 -வது வார்டு கவுன்சிலர்)













