கன்னியாகுமரி மாவட்டம்: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி தொடக்கம்- வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கட்சியின் நிறுவனத் தலைவர் சிவ பிரசாத் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி இன்று தொடக்க நிகழ்வானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபிரசாத் கட்சியின் கொள்கைகளை விளக்கி கட்சியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ஸ்ரீராமன் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியின் விளக்கம் கொடுத்தார். இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற போலி மதச்சார்பின்மை கடைப்பிடிக்கும் கட்சிகளுக்கு எதிராக இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் போதை கலாச்சாரத்தின் விளைவாக இன்று நடைபெற்று கொண்டு இருக்கக்கூடிய பல கொள்ளை கொலைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் போன்ற சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களை திருத்தி அதன் மூலம் பாரதத்தையும் தமிழகத்தையும் உயர்த்துவது போன்ற பல்வேறு கொள்கைகளை முன்னிறுத்தி இந்த கட்சி தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பரப்புரை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும். அதிமுகவிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணிகளில் மேற்கொள்ள இருப்பதாகவும் நிறுவனத் தலைவர் சிவபிரசாத் செய்தியர்களுக்கு பேட்டியில் தெரிவித்தார்.













