லஞ்ச ஊழலற்ற அரசு நிர்வாகத்தை வரவேற்கிறோம், அதே நேரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குபவர்களாக சித்தரிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது, மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, மாநிலத் தலைவர் அமிர்த குமார் பேட்டி, தேர்தல் வாக்குறுதியாக அளித்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜே வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் த.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சங்கம் சார்பில் நேரில் சந்தித்து, பத்து நிமிஷம் கோரிக்கை மனுவை அளித்ததாகவும், புதிய அரசு அதன் நிறைவேற்றித் தரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். புதிய பென்ஷன் திட்டம், தமிழக அரசின் பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டம் இவற்றை ரத்து செய்துவிட்டு, 23 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம், மருத்துவ காப்பீடு கட்டணம் அதிக அளவில் பெறப்படுகிறது, இதனால் தனியார் நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைகின்றன. இதனை தடுக்க அரசு சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியாக தமிழக வெற்றி கழகம் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க விஷயம் இதற்காக தமிழக அரசுக்கு தங்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கும், அதே நேரம் கையில் ரூபாய் வைத்திருக்கக் கூடாது ஜிபே உள்ளிட்டவை மூலம் பணம் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற உத்தரவுகள் மூலம் நடைமுறை செலவுகளுக்கு கூட அரசு அலுவலர்கள் பணம் வைத்திருக்க முடியாத நிலைமை உருவாகும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே லஞ்சம் வாங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.
பைட் :-
த.விஜயகுமார் மாநிலத் தலைவர் அரசு அலுவலர் ஒன்றியம்















