மங்கைநல்லூரில்
மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ஜான்.21. கான்கிரீட் போடும் வேலை பார்க்கும் இவர் அவ்வப்போது மது அருந்திவிட்டு வருவது வழக்கம். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாயார் சுகந்தி மகனை கண்டித்து திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஜான் இன்று மதியம் மது போதையில் கடைவீதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து ரகலையில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் கீழே இறங்கச் சொல்லியும் கேட்காத நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜானை செல்போன் டவரில் இருந்து கீழே இறக்கினர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கம்பம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













