சீர்காழியின் நகராட்சிக்கு உட்பட்ட பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர். குடிநீருடன் கழிவு நீர் கலக்கும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பிடாரி வடக்கு வீதியில் நகராட்சி சார்பில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது இவற்றில் அப்பகுதி பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்இதனிடையே இந்த குடிநீர் குழாய் அருகில் செல்லும் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அங்கிருந்து சாக்கடை குடிநீர் குழாய் பிடிக்கும் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது இதனால் பெரும்குடிநீருடன் கழிவு நீர் கலந்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது குடிநீரை பிடிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதியுடன் குடங்களைக் கையிலே வைத்தவாறு குடிநீர் பிடித்து செல்லுகின்றனர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது













