திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருவாரூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தீபாவளி சிறப்பு விற்பனையை குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள், கூறைநாடு புடவைகள், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
திருவாரூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025ல் ரூ.32.28இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2026க்கு ரூ.49.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை மண்டல மேலாளர் தமிழ்ச்செல்வி, திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சுமதி, வடிவமைப்பு மேலாளர் வைரமுத்து, திருவாரூர் வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.













