மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் நேரில் ஆய்வு, மாநில முழுவதும் 1695 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் விரைவில் நிரப்பப்படும், மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள கழிவறை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர், கழிவறைகள் சுகாதாரமற்ற சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும், குழாய் உள்ளிட்ட கருவிகள் தரமற்ற பொருத்தப்பட்டுள்ளதை அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டிய அமைச்சர், ஒப்பந்தக்காரர் மூலம் மீண்டும் சரியான பொருட்களை கொண்டு மாற்றி அமைக்கும்மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து உளுத்துகுப்பை மற்றும் சங்கரன் பந்தல் ஆகிய இரண்டு இடங்களில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார், மேலும் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரங்களை அணிவித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சர், மருத்துவத்துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் மருத்துவத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,
மாநிலம் முழுவதும் புதிதாக 1695 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நல சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 101 புதிய செவிலியர் பணியமர்த்தப்படுவார்கள் இதன் மூலம், பற்றாக்குறை நீங்கும் என்று தெரிவித்த அமைச்சர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் விரைவில் இதய நோய் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மாநிலம் முழுவதும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லை எனவும், பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி உதவி விடுபட்ட பயனாளிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பைட்:-
அமைச்சர் அருண் ராஜ்







