பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம்:
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், பறித்துச் சென்ற தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய உதவிய மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரிடமும் இருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.







