எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – குளங்கள், கோவில்கள், வீடுகள் ஆகியவற்றை மீண்டும் இழக்க நாங்கள் தயார் இல்லை – புறவழிச் சாலை அமைக்க வழி இருந்தும், ஒரு சிலரின் சுயநலத்துக்காக நகருக்குள் சாலையை விரிவாக்கம் செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை
உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பரிந்துரை செய்து புறவழிச்சாலை பணியை துவக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையைடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரை சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்காக பணிகள் நடைபெற்ற வருகிறது. இதற்காக சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூரிலிருந்து கொரடாச்சேரி வரை புறவழிச் சாலை அமைக்கப்பட்ட நிலையில், பத்தூர் கிராமம், முகந்தனூர், ஆய்க்குடி ஊராட்சிகள் வழியே ஐந்து கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த சாலை மீண்டும் அம்மையப்பன் பகுதியில் புறவழிச்சாலையாக மாறி செல்கிறது.
ஆய்க்குடி ஊராட்சி மெயின் ரோடு குடியிருப்பு பகுதி மற்றும் தைக்கால் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதாகவும் ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு வழிச்சாலை அமைத்து நிறைய இழப்புகளை ஏற்படுத்திய நிலையில் மேலும் நான்கு வழிச்சாலை அமைக்க படுவதால் இந்த பகுதியில் வசிப்பவர்கள், முற்றிலுமாக வீடு, மனை மற்றும் தொழில் வர்த்தகம் போன்ற வாழ்வாதாரங்களை இழக்க நேரிட்டுள்ளது. மேலும் கோயில்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளை இழக்கும் நிலையும் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்பு பகுதியை பாதிக்காமல் நான்கு வழிச்சாலையை புறவழிச்சாலையில் அமைத்துகொள்ள வழி இருந்தும் ஒரு சிலரின் சுயநலத்துக்காக புறவழிச் சாலை அமைக்கப்படாமல் ஊருக்குள் செல்லும் வகையில் இந்த சாலை பணிகள் நடைபெற்ற வருவதை தடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையிட்டு புறவழிச்சாலை பணியை விரைவாக துவக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
பேட்டி:
- பாக்கியலட்சுமிகாந்தன் – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
- ராமகிருஷ்ணன் – ஊர் பெரியவர்







