வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு :-
தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில், மாங்கல்ய பலம் வேண்டியும், குடும்ப விருத்திக்காகவும், பெண்கள் வீடுகளில் விரதம் இருந்து, மகாலட்சுமியை பூஜை செய்வது வரலட்சுமி நோன்பு எனப்படுகிறது. இன்று வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் வீடுகளில் கும்ப கலசத்திற்கு அம்பாள் போல் அலங்காரம் செய்து, கும்பம் மற்றும் குத்துவிளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து, இனிப்புகள் படையல் இட்டு வழிபாடு மேற்கொண்டனர் அருகில் உள்ள பெண்களுக்கு, பிரசாதங்கள் வழங்கி கொண்டாடினர்













