200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை என கோரிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் மசூதியில் குவிந்ததால் பதட்டம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை குவிந்ததால் பரபரப்பு. *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) சமூக சேவகரான இவர் கடந்த இரண்டு வருட காலமாக சிறுக சிறுக சேகரித்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள நான்கு மசூதிகளுக்கு சொந்தமான வஃக்பு வாரிய சொத்துக்களை மசூதியின் முத்தவல்லிகள் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு 200 கோடிக்கு மேல் விற்று விட்டதாகவும் ஊழல் செய்துவிட்டதாகவும் ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகம் மற்றும் வக்ஃபு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை துறை சார்ந்த அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாமல் இருப்பதற்கான காரணம் என்ன ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிக்க நாம் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விவாதிக்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் மசூதியில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதை அறிந்த திருப்பத்தூர் நகர காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மசூதி வாசலில் போலீஸாரை குவித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் இரு தரப்பிற்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம் உடனடியாக நாளை வந்து நேரடியாக பேசிக் கொள்ளுங்கள் சுமூகமான பிரச்சனை ஏற்பட நடவடிக்கை எடுக்கிறோம் என்று சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்பு சுமார் இரண்டு மணி நேர பதட்டத்திற்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.













