நியாய விலை கடை பணியாளர்களுக்கு பல கூட்டுறவு சங்கங்களில் இதுவரை ஊதிய உயர்வு வழங்காத நிலையில் உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
திருவாரூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டும் பல கூட்டுறவு சங்கங்களில் இதுவரை உரிய உயர்வு வழங்கப்படவில்லை. உடனடியாக அரசு தலையிட்டு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹரிகரன் நிறுவனத் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பேட்டி : குணசீலன் மாவட்ட தலைவர் & மாநில துணை தலைவர் .













