September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

by Satheesa
September 28, 2025
in Bakthi
A A
0
குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

புதுக்கோட்டை அருகே காரையூர் செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் சாலையில், குமரமலை பால தண்யுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் திருவுருவிலும் அவனே வழிகாட்டிய வித்தியாசமான சக்திமிக்க திருத்தலம் குமரமலை திருக்கோயில்.
சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்ட தீவிர முருக பக்தர் சேதுபதி. 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது.

பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன் என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன்,
இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு.

நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப்பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.
அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள்.

இனி இந்தக் குன்று குமரமலை என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள என்று சொல்லி மறைந்தார்.
கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.

அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூ ரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள் என்று சொல்லி மறைந்தார்.

அந்த இடத்தில் கோவில் கட்டி பாலமுருகன் சிலையை பிரதி~டை செய்தார். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம் சூட்டினார். 1898ல், பல்லவராயர்கள் கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர். வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிN~கம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.

வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர்.

இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு செய்கின்றனர். குமரமலைக்கு ச~;டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது. பங்குனி உத்திரத்தன்று, பத்தாம் திருநாளில் அருகிலுள்ள குன்னக்குடிப்பட்டியிலுள்ள வெள்ளாற்றில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

நர்த்திக்கடன்: முருகனுக்கு அபிஷேகம் செய்தும், பால்குடம் எடுத்தும், காதுகுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
திருச்செந்தூரில் மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்ட இடைவெளியில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.
அதேபோல் இங்கு இடும்பன் சந்நிதிக்கு முன்னால் 24 மணி நேரமும் கடற்கரை காற்றுபோல் இதமான காற்று வீசுவதை அனுபவிக்கலாம். எதிரில் மரங்களோ குளமோ எதுவுமில்லை. இது ஆச்சரியம்!

குமரமலை முருகனின் பக்தர் முத்துமீனாட்சி கவிராயர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிN~கம் செய்து நாள்தோறும் வழிபட்டு முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார்.

அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து குமரேச சதகம் என்று பெயரிட்டு, தன் பெய ரையும் குருபாத தாசர் என்று மாற்றிக் கொண்டார். அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல் ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.

இந்தக் குமரமலை குமரேசனை வழிபடும் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அடைகிறார்கள். நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நோயற்ற வாழ்வும் மணமாலையும் மக்கட் பேறும் கிடைக்கும்.

சித்திரை வருடப் பிறப்பு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளியில் பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். ஐப்பசியில் கந்தசஷடி, மாதந்தோறும் கார்த்திகை, திருக்கார்த்திகை, சோமவார விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆங்கில வருடப் பிறப்பன்று படிபூஜை விழா என சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

தினசரி மலையை ஒட்டியுள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் நீர் கொண்டு வந்து, சங்குச் செடிப் புதரில் வந்தமர்ந்த தண்டாயுதபாணிக்கு அதைத் தொடர்ந்து நான்கு கால பூஜையும் நடைபெறுகிறது.

Tags: Kumaramala Pala Thandayuthapani Templepudhukottaitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

Next Post

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.