கூவத்தூர் அருகே வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு இது கொலை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே வடபட்டினம் பஞ்சாயத்து மீனவர்கள் கிராமத்தில் வசிக்கும் சீதாலட்சுமி இவருடைய மகன் ஜெயபிரகாஷ் இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி அதே பகுதியில் சக நண்பர்களுடன் சென்றுள்ளார் அப்பொழுது ஜெயபிரகாஷ் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது பைக் மோதி விபத்துக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது அப்பொழுது இவர்களுடன் இருந்த நண்பர்கள் தப்பி சென்றதாக அந்தப் பகுதியில் உள்ள மீனவ மக்கள் கூறுகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயபிரகாசை நிகழ்ச்சிக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயபிரகாஷின் தாய் சீதாலட்சுமி என் மகனை திட்டமிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளனர் என்று கூவத்தூர் காவல் நிலையத்தில் உறவுகளுடன் சேர்ந்து புகார் அளித்துள்ளனர் .
மேலும் ஜெயபிரகாஷ் உயிர் இருந்ததற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஜெயப்பிரகாசன் தாய் மனக்குமுறில் இருந்து வருகிறார்.
காவல்துறை உண்மையைக் கண்டறிந்து என் மகனை பைக் மோத செய்து மர்ம நபர்கள் கொலை செய்ததாக அங்கு இருந்த மீனவர்கள் நேரடியாக பார்த்ததாக கூறுகிறார்கள் இந்த அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து காவல்துறை உண்மையை கண்டறிந்து கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் மேலும் பிரகாஷ் உயிரிழந்ததற்கு ஞாயம் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் .













