மயிலாடுதுறையில் நடைபெற்ற
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மற்றும் மெட்வே மருத்துவமனை ஆகியவை இணைந்து ஹெல்மெட் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். வரதாச்சாரியார் பூங்காவில் தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வர் சாமிநாதன் தலைமையில் தொடங்கிய பேரணியில் டாக்டர் பாலாஜி போதைக்கு எதிராக விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். பார்க்அவன்யூசாலை, கச்சேரிரோடு, காந்திஜிரோடு, பட்டமங்கலத்தெரு வழியாக சென்று பேரணி நிறைவடைந்தது. இதில் ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் குறித்தும், போதை பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த கோஷங்கள் எழுப்பியவாறு மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.













