சீர்காழி அருகே திருவெண்காடு – நெய்தவாசல் சாலையில் பல மாதமாக சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடுநெய்தவாசல் செல்லும் சாலையில் தேரடி குளம் அருகில் சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டும் பணி தொடங்கியது.இந்தப் பணிகள் தொடங்கி சில மாதங்களை கடந்தும் பணிகள் முழுமை அடையாமல் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது இந்த பணிகளுக்காக சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டு அருகில் உள்ள வயல் வழியாக இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பணிகள் தொடங்கி ஒரு மாதத்தை கடந்தும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் நெய்தவாசல், கடைக்காடு, சின்ன பெருந்தோட்டம், நாயக்கர்குப்பம், தருமகுளம் வழியாக பூம்புகார் செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகள்,விவசாயிகள் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அருகில் உள்ள வயல் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் சிறு மழை பெய்தாலும் சேறும், சகதியுமாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் பணிகள் நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்டனம் முழக்கங்கள் எழுப்பி கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
பொதுமக்கள் பேட்டி 1.சிவ மனோகரன்













