திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் வருடம் 365 நாட்களும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் உட்பட சிறப்பு யாக பூஜைகளும் நடைபெறுவது வழக்கம் உள்ளூர் வெளியூர் வெளி மாவட்டம் வெளி மாநிலம் வெளிநாட்டினர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை ஒட்டி அபிராமி அம்மன் சன்னதியில் 108 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது மேலும் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்று லட்சார்ச்சனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் லட்சார்ச்சனை செய்த அனைவருக்கும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது கோவில் கோவில் குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.













