கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம்,பசுமையான தமிழகம், ஆரோக்கியமான தமிழகம்,வளமான தமிழகம் என்ற தலைப்பில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு பேரணி சமூக சேவகரும்,வீ த லீடர்ஸ் இயக்க நிர்வாகியுமான சகாயம் தலைமையில் நடைபெற்றது-இதில் பெண்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு-விழிப்புணர்வு பதாகையுடன் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர்.
வீ த லீடர்ஸ் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மில் வீ த லீடர்ஸ் இயக்க நிர்வாகியும்,மக்கள் சேவகருமான.E.S. சகாயம் தலைமையில் இன்று போதைக்கு எதிராகவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,இந்த பேரணியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,போதை இல்லா தமிழகம், பசுமையான தமிழகம்,ஆரோக்கியமான தமிழகம்,வளமான தமிழகம் என்பதை முன்னேடுத்து நடைபெற்ற இந்த பேரணியானது வடசேரி எம் ஜி ஆர் சிலை முன்பு இருந்து மணிமேடை வழியாக,சென்று பின்னர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் முன்பாக கடந்து வடசேரி பேருந்து நிலையம் வழியாக மீண்டும் எம்ஜிஆர் சிலையை வந்து அடைந்தது,இதில் பெண்கள் இளைஞர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விசுவல்.பேரணி
பேட்டி.E.S.சகாயம்













