அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியல் களத்தில் முன் அனுபவம் பெற்று முதல்வர் ஆன நிலையில் முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் உள்ளதாக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கருத்து-மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படாத வகையில் தற்போதைய ஆட்சி அமைய வேண்டும் எனவும் கூறினார்-முன்னதாக நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் குமரி மாவட்ட அதிமுக புதிய தலைமை அலுவலகத்தை எம்எல்ஏ தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலக திறப்பு விழா நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நடைபெற்றது,இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு கழக செயலாளருமான. தளவாய்சுந்தரம் எம் எல் ஏ விழாவில் பங்கேற்று ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார், பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் அரசியல் களத்தில் மிகுந்த அனுபவம் பெற்று முதல்வரான நிலையில் தற்போதைய முதல்வருக்கு அவ்வாறான அனுபவம் இல்லாததால் பிரச்சனைகளை சமாளிப்பதில் அவருக்கு சிரமம் உள்ளதாக கூறினார்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவில் பதவி ஆசைகளோடு வந்துவிட்டு பின்னர் கட்சி தாவி செல்லும் நபர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியைகளின் நிலைப்பாட்டை பொறுத்து தவெக ஆட்சி தொடரும் என்றார்
தமிழகத்தில் மின்வெட்டு அதிக அளவில் காணப்படுகிறது சட்டசபையில் இது குறித்து பேசியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தனது கருத்து என்றார் உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.













